புதுவருடம் ஆரம்பித்து ஜனவரி மாதம் முடியப்போகிறது! புதுவருட ஆரம்பத்தில் விடுமுறை நாட்களும் அதிகமாயிற்று, வங்கிக்கணக்கில் பணம் வேறு நிறைய செலவாயிற்று! என்ன பண்ணலாம்னு யோசிக்கிறீங்களா! அப்போ கீழே உள்ள 10 வகையான செயல்களை உடனே நிறுத்திக்கோங்க!
1. செலவு செய்வதை நிறுத்திவிட்டு சேமிக்க வழிவகை செய்யுங்கள்!
வாடகை காரில் செல்வதையும், டீ, காஃபீ மற்றும் சிகரெட் குடிப்பதையும் குறைத்துக்கொண்டு அதை உங்கள் சேமிப்பில் போடுங்கள்!
2. சலுகைகள் இன்றி எந்தவொரு மளிகைப் பொருட்களையோ அல்லது மற்ற பொருட்களையோ வாங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
இப்போதெல்லாம் இணையதளத்தில் உதாரணமாக ஹோம்ஷாப்18, ஆச்சி போன்ற இணையதளங்களில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன! அதனை காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுங்கள்!
3. அலுவலகத்தில் மதிய சாப்பாட்டினை காசு கொடுத்து வாங்குவதை நிறுத்தவும்!
நிறைய மனிதர்கள் நேரத்தை மிச்சாப்பபடுத்துவோம் என்று வீட்டில் சமையல் செய்யாமல் கடைகளில் வாங்கி சாப்பிடுகின்றனர். ஒரு சாப்பாடு 50 ரூபாய் என்றால் 10 நாளைக்கு 500 ரூபாய். ஒரு மாதத்திற்கு 1500 ரூபாய். இதை தவிர்த்தால் மாதம் 1500 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.
4. உங்கள் சம்பள பணத்தை அவசரப்பட்டு செலவழிப்பதை நிறுத்திக்கொள்ளவும்!
நீங்கள் வாங்கும் சம்பள பணத்தில் மாதம் 50 முதல் 500 ரூபாய் வரை சேமித்தால் வருட முடிவில் ஏதாவது ஒரு கடனை அடைக்க வழிபிறக்கும்!
5. அவ்வப்போது வங்கி அட்டைகளில் இருந்து பணம் எடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே!
அடிக்கடி தானியங்கி பண இயந்திரம் மூலம் பணம் எடுப்பதை தவிர்த்து ஒரு தடவை மட்டும் ஒரு மாதத்திற்கு தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளவும்!
6. அதிகப்படியான பணத்தை சுற்றுலாவில் விரயம் செய்வதை தவிர்க்கவும்!
7. உங்கள் பணம் வரவு செலவு திட்டத்திலிருந்து கைமீறி செல்வதை உணர்ந்து செலவு செய்வதை நிறுத்திக் கொள்ளவும்!
8. கற்பனையின்றி, நல்ல கணக்கிடுதலோடு சேமிப்பை துவங்குங்கள்!
இதையெல்லாம் நீங்கள் கடைப்பிடித்தால் நல்ல அதிர்ஷ்டம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றது என்று அர்த்தம் நண்பர்களே!
No comments:
Post a Comment